விஜய் சேதுபதி  -சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் “மாமனிதன் “. கடந்த  டிசம்பர் மாதம் ஆரம்பமான இப்படத்தின் ஷூட்டிங், தற்போது நிறைவடைந்து உள்ளது என படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

ஏற்கனவே தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று  மற்றும் இடம் பொருள் ஏவல் படத்தில் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவுடன் இளையராஜாவும் இணைந்து பணிபுரிய உள்ளார்.  படம் சம்பந்தமாக , சீனுராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் டிவிட்டில் ,” மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது, எல்லா புகழும் என் படக்குழுவையே சேரும். விரைவில் இசைஞானியின் பின்னணி இசையை கேட்க ஆர்வமாக உள்ளேன். படத்தின் டப்பிங் வேலைகள் கூடிய விரைவில்  தொடங்க உள்ளன,” என பதிவிட்டிருந்தார்.

 

 

இளையராஜாவும் யுவன் ஷங்கர்வும் இணைந்து பணீபுரியும் முதல் திரைப்படம் இது.  தங்கள் இசையால் நம்மை கட்டி போட்டு வைத்துள்ள இரு இசை ராஜாக்களும் இணைவதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. சீனுராமசாமியும்  யுவன் ஷங்கர்வும் இணைந்து பணீபுரியும் நான்காவது படமும் கூட. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்த காயத்ரி நடிக்கிறார்.