கோலிவுட்டில் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு சில படங்கள் உருவாக்கபடுவதுண்டு காக்கமுட்டை, பசங்க, பசங்க 2 இப்படி பல படங்கள் தமிழ்ச் சூழலில் வெளியாகி பரவலாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது,
இந்தவகையில் முழுக்கமுழுக்க குழந்தைகளை மட்டுமே டார்கெட் ஆடியென்ஸாக வைத்து அட்வென்ச்சர், ஃபேண்டஸி படமான ‘தும்பா’ உருவாகியுள்ளது. கோடை விடுமுறையையொட்டி இப்படம் மே மாதம் வெளியாவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யா (மார்ச் 16) இன்று வெளியிட்டார்.
இந்தப் படத்தின் கரு, அது எடுக்கப்பட்ட விதம், VFX என இந்த ஆண்டு வெளியாகும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமான படமாக இருக்கும் என படக்குழு உறுதிப்பட அறிவித்துள்ளது
அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கும் இப்படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா ஆகியோருடன் பிரபலமான நடிகர்கள் சிலரும் நடிக்கிறார்கள். அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என மூன்று இசையமைபாளர்கள் இப்படத்திற்கு இசையமைதுள்ளனர்.
இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே.ராஜேஷ் பெற்றிருக்கிறார்.