விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திரைப்படம் மே 10-ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படம் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
‘அயோக்யா’ படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வெங்கட் மோகன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சாம் C.S இசையமைத்துள்ளார்.
ராஷி கண்ணா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், வம்சி கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர்.