துருவங்கள் பதினாறு மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்த கார்த்திக் நரேன் ‘நரகாசுரன்’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் வெளிவருவதில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில் அருண்விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
சமீபகாலங்களில் அருண்விஜய் நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி தன் உடலை கட்டுக்கோப்பாக மெருகேற்றியுள்ளார். ஏற்கனவே குற்றம் 23, தடம் போன்ற அதிரடி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மாஃபியா (அத்தியாயம் 1) படத்தில் தற்போது நடித்துவருகிறார். இப்படமும் அதிரடியான திரில்லர் வகை படமாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது.
அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் நடிக்க ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைக்கா புரொடக்ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.