பரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்கிறார் இப்படத்திற்கு K13 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
சமீப காலமாக வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துவரும் அருள்நிதி இப்படத்தில் மன உளைச்சலுக்கு உள்ளான மற்றவர்கள்போல் வாழமுடியாத மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவனாக நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, ஷ்ரத்தா நடித்திருக்கும் இப்படத்தை சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். அரவிந்த் சின்ஹா ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். படம் கூடிய விரைவில் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.