மேக்னா குல்சார் இயக்கும் ‘சபாக்’ என்ற புதிய படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தின் ப்ரஸ்ட் லுக் இன்று வெளியானது. அதில் ஆசிட் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தவரின் வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார்.
தீபிகா படுகோனே படத்தின் ப்ரஸ்ட் லுக் வெளியிட்ட உடனே பாலிவுட்டை மிகுந்த ஆச்சிரியத்திற்குள்ளாக்கியுள்ளது. வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், கஜராஜ் ராவ் போன்ற பிரபலங்கள் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளன.
மேலும் இப்படம் ஜனவரி 2020 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.