விமல், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனக் கூறி தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக இயக்குநர் சற்குணம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சற்குணத்தின் முதல் படமான களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இப்போது இயக்கியுள்ளார். இப்படத்தை வெளியிடுவதற்கு தனலட்சுமி புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்கிறது.
தடையை நீக்கும் சட்ட நடவடிக்கைகளை சற்குணம் தரப்பு செய்து வரும் நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சற்குணம் கோரிக்கை வைத்துள்ளார்.