பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செல்வராகவன்-சூர்யா முதல்முறையாக இணைந்திருக்கும் `என்ஜிகே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படத்தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ்(Dream Warrior Pictures) தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில், சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருகிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சூர்யாவுடன் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டீசரில் அரசியல் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் வருகிற மே 31-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதில் ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.