பொதுவாக தமிழ் சினிமாச் சூழலில் கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருந்த கதையானது, பல தலைமுறைகளின் வலிநிறைந்த ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அடர்த்தியான வாழ்க்கை. தற்போது இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
அறிமுக இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் படம் கடந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான விருதுகளையும் வென்றது. பல விருதுகளை குவித்த இந்தப் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார்.
தற்போது இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது. கன்னடத்தில் இந்தப் படத்தை காந்தி மணிவாசகம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க புதுமுக நடிகர் மைத்ரேயா, கதிர் கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.