மிருகம், ஈரம், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்த ஆதி தற்போது தெலுங்கு – தமிழ் என இரு மொழிகளிலும் கவனம் செலுத்து வருகிறார்.
ஆதி குறித்து தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலில், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவர் நடிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மையான பாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாகவே கூறியிருந்தனர். இப்போது ஆதியும் அதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.