ரெமொ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன், நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
கார்த்தி, ராஷ்மிகா மந்தானா, யோகி பாபு, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று(மார்ச் 13) நடைபெற்றது.
முழுக்க முழுக்க ஆக்ஷன், காதல், காமெடி கலாட்டவுடன் உருவாகவிருக்கும் இப்படம் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் அதிக பொருட்செலவில் முழு படப்பிடிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கார்த்தி நடித்த ‘தேவ்’ திரைப்படம் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறாதநிலையில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.