காலம், தனக்கான துணையை தேடித்தந்து நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை புத்துயிர்ப்பு செய்துள்ளது. பல காதல் தோல்விகள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்கள் என அனைத்தையும் தாங்கி தமிழ் சினிமா சூழலில் இரும்பு பெண்மனியாக திகழ்ந்த நயன் தாராவுக்கு தற்போதைய காதலன் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் இடையே முதலில் காதல், அதைத்தொடர்ந்து பிரபுதேவாவுடன் காதல், இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதலில் மூழ்கியுள்ளார் நயன் தாரா.
விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவி போல் வாழ்ந்து வருகிறார்கள். தமிழில் அதிகம் சம்பளம் பெரும் நடிகையாக இருக்கும் நயன் தாரா தற்போது தான், செல்ல நினைத்த அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனும் சென்றுவருகிறார். அதிலும் குறிப்பாக தேனிலவுக்கென்று பிரத்யேகமான பெயர்பெற்ற நாடுகளை தேர்வு செய்து சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் தேன்நிலவு ஜோடிகளுக்கு உகந்த கிரீஸ் நாட்டுக்கு இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் சிவன், நயன்தாராவை வெள்ளை உடையில் புதிய தோற்றத்தில் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதை தன்னுடைய ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதாவது, ஒரு கண்ணாடி அறைக்குள் நயன்தாரா நிற்பது போன்றும், கண்ணாடிக்கு வெளியே விக்னேஷ் சிவன் நின்று செல்போனில் புகைப்படம் எடுப்பது போன்றும் அந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.