முன்னணி இயக்குநர் மிஷ்கின் சமீபகாலமாக நடிப்பிலும் தன்னை நிரூபணம் செய்து வருகிறார். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்கத்தி போன்ற படங்களில் நடித்த அவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இப்போது விக்ராந்த், சுசீந்திரன் ஆகியோருடன் ’சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் மிஷ்கின் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்கும் மற்றொரு படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
‘டு லெட்’ படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
மிஷ்கின் மற்றும் ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குவதாக தெரிகிறது.