ஈரான் இயக்குநர் மஜித் மஜிதியின் முக்கியமான திரைப்படம் சில்ரன் ஆஃப் ஹெவன். இப்படம் உலக சினிமா ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று உலகம் முழுக்க பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது.
1997ஆம் ஆண்டு வெளியான யதார்த்த காவியமான இப்படத்தின் கதைகருவை கொண்டு தமிழில் ‘அக்கா குருவி’ என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது.
இப்படத்தை மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாமி இயக்கியிருக்கிறார்.
படம் விரைவில் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.