ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் ப்ரதீக் பாப்பார் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதில் மற்றொரு பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிலிருந்து புகைப்படங்கள் வெளியான விவகாரம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாலிவுட் துணை நடிகர் ஜத்தின் சர்னா தர்பாரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியுடன் புகைப்படம் எடுத்து ஜத்தின் சர்னா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.