அண்மையில் நயன்தாரா இரு வேடங்களில் நடித்து வெளிவந்த படம் ஐரா. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, தான் நயன்தாராவை திட்டியதாக சின்னத்திரை நடிகை செந்தில்குமாரி தெரிவித்துள்ளார்.
நயன்தாரா அடுத்தடுத்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் ஐரா. இதில் இரு வேடங்களில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் சின்னத்திரை நடிகை செந்தில் குமாரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் தான் நயன்தாராவை திட்டினேன் என்று கூறியுள்ளார்.
“இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, மேக்கப் போட்டு முடிந்தவர்கள் அனைவரையும் இயக்குநர் அழைத்தார். அப்போது ஒரு பெண் என்னை இடித்துக் கொண்டு வேகமாக ஓடினார். யார் இவர்? இடித்துவிட்டு மன்னிப்புக் கூட கேட்காமல் போகிறார்? என திட்டினேன். அப்போது அருகில் இருந்த என் உதவியாளர், மேடம் அது வேறு யாருமில்லை நயன்தாராதான் என கூறீனார்” என செந்தில்குமாரி பேசுகையில் கூறினார்.
இதனையடுத்து நயன்தாராவையா நான் திட்டினேன் என அதிர்ச்சி அடைந்ததாகவும் நயன்தாரா மேக்கப்போட்டு முகம் கருப்பாக வேறு ஆள் போல் இருந்ததால் அடையாளம் தெரியாமல் திட்டிவிட்டேன் எனவும் செந்தில் குமாரி தெரிவித்தார்.