மணிரத்னம் இயக்கும் படங்களில் சிலவற்றை அவரது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரித்திருக்கிறார். கடைசியாக வந்த செக்கச் சிவந்த வானம் படத்தையும்கூட மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்தார் மணிரத்னம்.
தற்போது அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். ‘வானம் கொட்டட்டும்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை தனா இயக்குகிறார்.
கதை வசனத்திலும் மணிரத்னம் பங்காற்றும் இப்படத்தில் மடோனா செபஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்கும் வானம் கொட்டட்டும் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.