யூ-டூப்பில் பரவலாக இளைஞர்களின் கவனத்தை பெற்றிருக்கும் ப்ளாக் சீப் சேனல் தற்போது வெள்ளித்திரையில் காலடியெடுத்து வைத்திருக்கிறது.
பல மில்லியன் மக்களை ஃபாளோயர்ஸ்களாக கொண்ட இந்த சேனல் 300 மேற்பட்ட பயனுள்ள வீடியோக்களை வெளியீட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூக அக்கறையாலும் பல முற்போக்குச் சிந்தனை விடியோக்களாலும் பல லட்ச ரசிகர்களை சப்ஸ்க்ரைப்பராக பெற்றிருக்கிறது.
இந்த சேனலில் பணியாற்றியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரையில் வந்துகொண்டே இருக்கும் வேளையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் விடியோ ஜாக்கி ரியோவை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளது இக்குழு.
கார்த்திக் வேணுகோபால் ப்ளாக் சீப் சேனலில் ‘ஒரு கதை சொல்லட்டா சார்’ ப்ரோகிராம் மூலம் பிரபலமானவர்.
மேலும் இப்படத்திற்கான டைட்டில் வைக்க நடந்த அக்கபோறுகளையெல்லாம் தொகுத்து ஒரு விடியோவாக நேற்று (18.03.2019) வெளியீட்டுள்ளது பிளாக் சீப் சேனல்.
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பு ‘நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்பதுதான் என்று படக்குழு இந்த வீடியோவில் அறிவித்துள்ளது.
சின்னத்திரை பிரபலம் ரியோ மற்றும் பிளாக் சீப் சி.இ.ஓ. ஆர்.ஜெ.விக்னேஷ் நடித்திருக்கு இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் பின்னணி பாடகர் ஷபிர் இசையமைத்திருக்கிறார் பென்னி ஓலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஏற்கனவே ஹிப்ஹாப் தமிழன் நடிப்பிலும் இயக்கத்திலும் வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஆர்.ஜெ.விக்னேஷின் குழுவும் வெள்ளித்திரையில் பயணிக்கப்போகிறது. படம் விரைவில் வெளியாகி யூடூப் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.