விஜய் எப்போதும் ஒருபடத்தின் பணிகளை முழுமையாக முடித்த பின்னரே அடுத்தப் படத்துக்கு செல்வார். எனினும், அடுத்தப் படத்தின் ஆயத்தப் பணிகளைக் கவனிக்க அவர் தவறுவதில்லை.
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘தளபதி 63’ ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டிக்கொண்டே செல்கிறது. சமீபத்தில், இப்படத்தின் வில்லன் ஷாருக்கான் என பரபரப்பை ஏற்படுத்தினர்.
நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்ட்மென்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ‘தளபதி 64’ திரைப்படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் கூடுதல் அப்டேட்டாக ‘தளபதி 64’ படத்துக்கு இசையமைக்கப்போவது யார் என புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது.
மெர்சல், சர்க்கார், ‘தளபதி 63’ என தொடர்ந்து மூன்று படங்களுக்கு ரஹ்மானே இசையமைத்துவிட்ட நிலையில், ‘தளபதி 64’ படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக கூறுகின்றனர். தகவல் உண்மையென்றால் கத்தி படத்துக்கு பிறகு அனிருத் இசையமைக்கும் இரண்டாவது விஜய் படமாக ‘தளபதி 64’ இருக்கும்.