‘செக்க சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய திரைப்படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு இரண்டு படங்களில் அருண் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.
நவீன் இயக்கத்தில் உருவாகும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் விஜய் அண்டனியோடு நடிக்கிறார். இதுமட்டுமின்றி, அவர் நடிக்கும் ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.தாய்லாந்து சென்று தற்காப்பு கலைகளைக் கற்றுவரும் அருண் விஜய், இதன் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.
அப்போது, ‘பாக்ஸர்’ படத்துக்காக தற்காப்பு கலைகள் பயிற்சியில் ஈடுபடுவதாக அருண் விஜய் கூறியதே இந்த திரைப்படம் பற்றி பேசப்பட்டதுக்கு காரணம்.அனைவரும் எதிர்பார்த்த இந்த படத்தின் டைட்டல் போஸ்ட்டர் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
விவேக் இயக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். ரித்திகா சிங் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களுக்கு பிறகு ‘துருவங்கள் 16’ நரேன் கார்த்திக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.