விக்கிப்பீடியா பக்கத்தில் கடந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகர்களில் நடிகர் விஜய் முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி, விக்ரம், சூர்யா ஆகியோர் பெரிய ரசிகர்கள் பட்டாளங்களைக் கொண்ட நடிகர்கள். இவர்களுக்கு அடுத்தவரிசையில், சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால், விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
மாஸ் ஹீரோக்களில் விஜய், அஜித் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இவர்களுக்கு இடையில் போட்டிதான். யாரோட படம் வெற்றி, யாரோட படம் தோல்வியடைகிறது என்பதில் இவர்களது ரசிகர்களுக்கு இடையில் சமூகவலைத்தளங்களில் கடும் வாக்குவாதமே நடக்கும். இந்த நிலையில், தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு விக்கிப்பீடியா பக்கத்தில் விஜய்யின் விக்கிப்பீடியா பக்கத்தை அதிகம் பேர் பார்த்ததன் மூலம் கோலிவுட் நடிகர்களில் நம்பர் ஒன் நடிகராக தேர்வாகியுள்ளார். அதாவது, 2.42 மில்லியன் பேர் விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தை பார்த்துள்ளனர்.