ஏ.எல்.விஜய் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு ‘தலைவி’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி கங்கனா ரனவத் கூறும்போது “ஜெயலலிதாஜீ மிகவும் தைரியமான பெண், தனி சூப்பர் ஸ்டாராக தன்னுடைய அரசியல் வாழ்வில் வலம் வந்தவர், அவருடைய வாழ்க்கை கதையில் நடிப்பது நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
தமிழ், ஹிந்தி மொழியில் உருவாகும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார்.
ஏற்கனவே ‘தி ஐயர்ன் லேடி’ என்ற தலைப்பில் நித்யா மேனன் நடிப்பில் இயக்குநர் பிரியதர்சினி ஜெயலலிதா பயோபிக்கை உருவாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது