கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பட்டியில் யோகிபாபு இணைந்ததிலிருந்து அவருக்கு வரிசையாக படங்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களிலும் நகைச்சுவை நடிகராக யோகிபாபு நடித்திருக்கிறார். 2019 முழுவதும் கால்ஷீட் கொடுக்கமுடியாமல் தவித்துவருகிறார். மேலும் ‘பட்டிப்புலம்’ படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் அட்லி இயக்கும் ‘தளபதி 63’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் புதுப்படத்திலும் யோகிபாபு இணைந்துள்ளார். ரஜினியுடன் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் யோகிபாபு.