பாகுபலியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் இன்று (14.3.2019) நடைபெற்றது. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை 300 கோடிக்குமேலான பொருட்செலவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1920-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த அல்லூரி சீதாராமன் ராஜு மற்றும் கொமரம் பீம் என்ற இரு சுதந்திர போராட்ட வீரர்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து கொரில்லா தாக்குதலில் ஈடுப்பட்டது தொடர்பான கதைதான் ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம்.
இப்படத்தில் அல்லூரி சீதாராம் ராஜூவாக என்.டி.ஆரும், கொமரம் பீமாக ராம்சரணும் நடிக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை டெய்ஸி எட்ஜர் ஜோன்ஸ், அலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தை 2020 ஜுலை 30க்குள் முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.