உச்சநீதிமன்றத்தில் ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற படத்தின் வெளியீட்டிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் முறையீட்ட எதிர்கட்சிகள் படத்தை வெளியீட எவ்வித தடையும் இல்லை என தெரிவித்ததை அடுத்து, எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (மார்ச் 8) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் தலைமையிலான அமர்வு முன் வருகிறது. அதேபோல் படத்தின் வெளியீட்டு தேதியை படத்தயாரிப்பு நிறுவனம் இரண்டுமுறை மாற்றி தற்போது ஏப்ரல் 11 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ‘பிஎம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பாலிவுட் முன்னணி நடிகரான விவேக் ஓப்ராய் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படமானது ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான “பண்டித்” அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 38 நாடுகளில் சுமார் 1700 திரையரகங்களில் திரைப்படம் வெளியாகும் என்றும் இந்தியாவில் மட்டும் சுமார் 600 திரையரகங்களில் வெளியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் ஆங்கிலம், ஹந்தி, தெலுங்கு உட்பட 23 மொழிகளில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.