மக்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக பார்க்ககூடியவை திரையங்குகள் மற்றும் வணிக வாளகங்களைத்தான். நாளுக்குநாள் வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களில் திரையரங்கள் வித்தியாசமான பல உள் கட்டமைப்புகளுடன் புதுபித்துக்கொண்டே வருகின்றன.
ஒவ்வொருவருக்கு வசதிகள் நிறைந்த தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். பெரு நகரங்களில் எல்லாம் இன்று ஏசி தியேட்டர்கள்தான் அதிகமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் ஏசி தியேட்டர் என்பதே அரிது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு திரையரங்கில் தற்போது புதிதாக ஒரு வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது தியேட்டருக்கு வருபவர்கள் ஜோடியாக பெட்டில் படுத்துக்கொண்டே படம் பார்க்கலாம். உங்கள் வீட்டின் பெட்ரூமில் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் அனுபவத்தை இங்கு பெறலாம்.
இந்த தியேட்டரில் மொத்தம் 22 பேர் அதாவது 11 ஜோடி மட்டுமே ஒரே நேரத்தில் படம் பார்க்க முடியும். இங்கு படம் பார்ப்பதற்கு சுமார் 48.5 டாலர் (இந்திய மதிப்பில் ரூ3400) வசூலிக்கப்படுகிறது.
மேலும் இந்த தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு ஸ்நாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஷோவின்போது பெட்ஷீட் மற்றும் தலையனைகள் மாற்றி பெட்கள் சுத்தம் செய்யப்படும். மேலும் இந்த தியேட்டரில் பார்வையாளர்களுக்கு வேறு என்ன வசதிகள் செய்து தரலாம், அவர்களுக்கு வழங்கப்படும் ஸ்நாக்ஸ் வகைகளை எப்படி அதிகரிக்கலாம் என தியேட்டர் நிர்வாகம் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த தியேட்டர் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. தற்போது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா செல்லும் இடங்களில் இத்திரையரங்கமும் இணைந்துள்ளது.