சமீபத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் தல அஜித்தை ஜிப்ரான் சந்தித்து பேசினார். இதனை ட்விட்டரில் பதிவிட்ட ஜிப்ரான், விரைவில் இணைந்து பணியாற்றலாமென அஜித் உறுதி அளித்ததாக கூறியிருந்தார்.
அஜித் கூறியபடியே இப்போது தனது அடுத்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற ஜிப்ரானுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். தற்போது பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் வினோத் இயக்கும் படத்திலேயே அஜித் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘அஜித் 60’ என அழைக்கப்படும் இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில், தான் சொல்லியபடியே ‘அஜித் 60’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பினை ஜிப்ரானுக்கு வழங்கியிருக்கிறார் அஜித்.
ஏற்கனவே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஜிப்ரானோடு வினோத் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.