வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் புதியதாக தனது படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜேம்ஸ் கேமரோன் இயக்கும் அவதார் பாகங்கள் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் அவதார் பாகம் -2 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளிவரும் என அறிவித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி முன்கூட்டியே அவதார் பாகம் 2 வை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி 2020 டிசம்பர் 18 அவதார் பாகம் இரண்டை தொடர்ந்து வரிசையாக 2023, 2025, 2027 என இரண்டுவருட காலங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் 21 செஞ்ரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் சில படங்களில் தொலைகாட்சி உரிமைகளையும் பெற்றுள்ளது. அதாவது 71 பில்லியன் டாலர் தொகைக்கு பல படங்கள் கைமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக ஸ்டார் வார்ஸ் படங்களையும் 2022, 2024, 2026 வருடங்களில் டிஸ்னி நிறுவனம் வெளியிடும் என தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்நிறுவன தலைவர் கேதலின் ஸ்டாஃப் கூறுகையில், “ஒரு வலுவான நிலையான நெடுநாள் திட்டத்தை ஒழுங்குபடுத்தி இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களுடன் பிக்ஸர், மார்வல், லுகாஸ், ஃபாக்ஸ், புளூ ஸ்கை என எண்ணற்ற படங்கள் இருக்கின்றன, அது உலகம் முமுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.