மிஸ்டர் லோக்கலைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
ரவிகுமார், மித்ரன், பாண்டியராஜ் வரிசையில் தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளார். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஹீரோயின் முடிவுசெய்யப்படவில்லை.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிரூத் இசையமைக்கிறார். வருகிற ஜூலை 2019 படப்பிடிப்பு தொடங்கி 2020ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.