கனா படம் வெற்றியைத் தொடர்ந்து கோலிவுட்டில் வரிசையாக விளையாட்டை மையப்படுத்தி படங்கள் வரவிருக்கின்றன. ஏற்கனவே தமிழ் சினிமா பத்ரி, கில்லி, எம்.குமரன் சன் அஃப் மகாலட்சுமி, சுண்டாட்டம், ஆடுகளம், சென்னை 600028, வெண்ணிலா கபடிக்குழு, பூலோகம் என்ற வரிசை இருந்தாலும் முழுமையாக விளையாட்டை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படவில்லை. கிட்டதட்ட மசாலா தன்மைக்கு ஏற்றவாறு விளையாட்டை பயன்படுத்திக்கொண்டு படங்கள் உருவாகின.
இந்நிலையில் விஜயை வைத்து அட்லி இயக்கும் தளபதி 63, சூசிந்திரன் இயக்கும் கென்னடி கிளப், ஐஸ்வரியா தனுஷ் இயக்கும் மாரியப்பன், கதிர் நடிக்கும் ஜடா, அறிமுக இயக்குநர் இயக்கும் வெண்ணிலா கபடிக்குழு பாகம் 2 என பெரிய வரிசையே கோலிவுட்டை கலக்க காத்திருக்கிறது.
போன வருடம் மற்றும் அதற்கு முந்தைய வருடங்கள் பேய் படங்களாக குவிந்துகிடந்த கோலிவுட்டில் இந்த வருடமும் அடுத்த வருடமும் விளையாட்டை மையமாக வைத்த படங்கள் திரையரங்குகளை ஆகிரமிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.