மாயவன் படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தாயரித்து இயக்கியிருக்கும் ‘கேங்ஸ் ஆஃப் மதராஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இன்று (19.03.2019) வெளியாகியுள்ளது.
மதராஸில் வாழும் தாதாக்களை மையமாக வைத்து துரோகம், காதல், நட்பு உள்ளிட்ட பல விஷயங்களை ரத்தம் கலந்த கேங்ஸ்டர் படமாக்கியுள்ளார் சி.வி.குமார்.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியாகி மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ‘கேங்ஸ் ஆஃப் வஸ்ஸீப்பூர்’ படத்தின் பாதிப்பில் ‘கேங்ஸ் ஆஃப் மதராஸ்’ படம் உருவாகியிருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றன.
கார்த்திக் கே. தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஹரி டஃபூயுஸா பாடல்களையும் ஸாமங்கலன் பின்னணி இசையையும் செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சி.வி.குமாருடனான நட்பு காரணாமாக இசை மேற்பார்வை பணியை மட்டும் செய்திருக்கிறார். படம் மே மாதம் வெளிவரலாம் என்று படக்குழு தெரிவிக்கிறது.