இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே. திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளனர். கூடவே ரகுல் ப்ரீத் சிங், நடித்திருக்கிறார்.
நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இளம் அரசியல்வாதியாக நடிக்கிறார். படத்தில் பல காட்சிகள் அரசியல்வாதிகளுடன் மோதும் துடிப்பான இளைஞனாக சூர்யா இருக்கிறார்.
சூர்யா – செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் ஏற்கனவே அதிகரித்திருந்தது.
மேலும் யுவனின் இசையில் வெளியான தண்டல்காரன் பாடல் ரசிகர் மத்தியில் பரவலாக கவனம் பெற்ற நிலையில் ட்ரெய்லரும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.