சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யா, முதற்கட்ட பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக படக்குழுவினரோடு அஜ்மீர் தர்கா சென்று வழிபாடு செய்திருக்கிறார்.
2019-ல் சூர்யா நடிப்பில் வரும் முதல் படமாக மே 31-ஆம் தேதி ‘என்.ஜி.கே’ வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
என்.ஜி.கே படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் ‘காப்பான்’ படத்தை கே.வி. ஆனந்த் இயக்குகிறார். மூன்றாவது முறையாக கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சூர்யாவின் இந்த படம் ஆக்க்ஷன் திரில்லர் வகைமையில் உருவாகிறது.
இதற்கு அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் நிலையில், அவர் அஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்திருக்கிறார். அவரோடு இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் இணை தயாரிப்பாளரும் வழிபாடு நடத்தினர்.