முன்னணி நடிகை அமலா பால் தனது புதிய படம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஆனால், இம்முறை நடிகையாக அல்ல தயாரிப்பாளராக இப்படத்தில் பணிபுரிகிறார் அமலா பால்.
‘கடாவர்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தில் பல்வேறு புதிய கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.
தடயவியல் சார்ந்த த்ரில்லர் படமாக ‘கடாவர்’ உருவாகவுள்ளது. அமலா பால் தயாரிப்பில் உருவாகும் படம் என்கிற அடையாளத்தோடு தயாராகும் இதுகுறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.
தற்போது ‘ஆடை’ என்கிற படத்தின் முதன்மையான பாத்திரத்தில் நடித்துவரும் அமலா பால், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.