‘எஸ்.கே – 16’ படத்துக்கு டி. இமான் இசையமைப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நாயகியும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் நாயகியாக அனு இமாணுவேல் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
நாயகி, இசையமைப்பாளர் அறிவிப்பு என அடுத்தடுத்த பணிகள் நடைபெறுவதால் ‘எஸ்.கே – 16’ வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படத்தின் தலைப்பு மீது தான்.