உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கை, உச்ச நீதிமன்ற விசாரணை குழு தள்ளுபடி செய்தது.
இதற்கு எதிராக பெண்ணிய செயற்பாட்டாளர்கள், பெண் வழக்கறிஞர்கள் என பலரும உச்ச நீதிமன்றம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
மேலும், மீ டூ இயக்கம் சார்பாக இந்த விவாகரத்துக்கு நாடு முழுவதும் போராட தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுமென தெரிகிறது.
மீ டூ இயக்கத்தில் இருக்கும் பாடகி சின்மயியும் சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளார். இதற்கு அனுமதி கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் அவர் மனு அளித்துள்ளார்.