அஜித் நடித்துக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் குணசித்திர வேடத்தில் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் நடிக்கவுள்ளார்.
“எனக்கு தமிழில் அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கல்கி கோச்லின் கூறியுள்ளார்.
தமிழில் சரளமாக பேச தெரிந்த கல்கி கோச்லின் இந்த படத்தில் பாடலில் எதிர்பார்க்கலாம் என்று படக்குழு தெரிவிக்கிறது.
ஹைதராபாத்தில் முழு படப்பிடிப்பை முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருப்பதாக படத்தின் இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.