ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஒபராய் நடிப்பில் தயாராகியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலையொட்டி இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என எதிர்க்கட்சியினரும் பல்வேறு சமூக ஆர்வலர்களுக்கும் வலியுறுத்தினர்.
“நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அந்தப் படத்துக்குத் தடை விதித்தது. அப்போது, “நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தொடர்ந்து மோடியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வெப் சீரீஸுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து தேர்தல் முடிந்த பின், வரும் 24 ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவுசெய்துள்ளது. இதை தயாரிப்பாளர் சந்திப் சிங் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.