‘பியார் கே பாபட்’ போன்ற இந்தி தொலைகாட்சி தொடர்களில் நடித்து வரும் பிரதிஷ் வோரா என்பவரின் 2 வயது மகள், விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பொம்மையை விழுங்கியதால் மூச்சித் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரதிஷ் வோரா ‘பியார் கே பாபட்’ என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் ‘நந்து குப்தா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கடந்த 7ஆம் தேதி இரவு, அக்குழந்தை வீட்டில் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அந்தப் பொம்மை குழந்தையின் தொண்டையில் போய் சிக்கிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைடுத்து குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
தனது மகளின் இறப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ள பிரதிஷ், குழந்தையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதிஷ் தம்பதியினருக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மும்பையில் இருந்து ராஜ்கோட் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குழந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.