விஜய் சேதுபதி நடிப்பில் பரபரப்பாக உருவாகிவரும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் இருப்பது ஒரு பாத்திரம்தான். இதோடு மற்றொரு கேரக்டரிலும் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தின் 50% படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறவுள்ளது.
ராக்ஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், ஆசுடோஷ் ராணா, ரவி கிஷன் என பலர் ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியோடு நடிக்கின்றனர்.