விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘சங்கத்தமிழன்’ என தலைப்பிட்டுள்ளனர். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிந்துபாத்’ இம்மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு, பின்னர் வெளியீடு தள்ளிபோடப்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து விஜய் சந்தர் படத்தில் அவர் நடிக்கிறார். இதன் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படாமல் மற்ற பணிகள் நடைபெற்று வந்தன.
விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘சங்கத்தமிழன்’ என தலைப்பிட்டுள்ளனர். தலைப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.