சூழலைப்பாதுகாக்கிற நுகர்வோராக  நட்சத்திர அந்தஸ்துடன் இருப்பவர்களுக்கு  வலை காத்திருக்கிறது.

அப்படியொரு அனுபவம் எனக்கு வாய்த்தது . சந்தை விரித்த வலைகளுள் அதுவும் ஒன்று

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தயாரிக்கப்படும்   பொருட்கள் மற்றும் இயற்கை வேளாண்மைப்பொருட்களுக்கு நுகர்வோர் மத்தியில் பெரும் வியாபாரச் சந்தை   வேறு எந்த காலத்தையும் விட கொரானா பாதிப்பு காலத்தில் உருவாகியுள்ளது.

நுகர்வோர் விழிப்புணர்வு என்பது இதில் முத்திரையாகக் கொள்ளப்பட்டுள்ளது.

 • நுகர்வோர் சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்களை வாங்குவது தாங்கள் ஆரோக்யமாக இருக்க உதவுகிறது தங்களின் ஆயுளைகூட்டுகிறது. மகிழ்ச்சியாக வாழ வழிவகைச் செய்கிறது என்ற ரீதியில் அவற்றை வாங்குவதில் அக்கறை கொள்கிறார்கள்.இவை விலை  கூடுதலாக இருந்தாலோ அல்லது இன்னொருபுறம் அதிகமானதாக இருந்தாலோ கூட வாங்க  நுகர்வோர் தயாரகிவிட்டனர் . இவர்களைப்பயன்படுத்தி பெருமளவில் விளம்பரங்கள் செய்து லாபம் சம்பாதிக்கிற முத்திரை குத்திக்கொண்ட நிறைய நிறுவனங்கள் சந்தையில் காணப்படுகின்றன

திருப்பூர் பனியன் உற்பத்தியில் இது போன்ற சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட “ எக்கோ பிரண்ட்லி “ பொருட்களுக்கு பல வெளிநாடுகள் முன்னுரிமை தருகின்றன. இந்த முன்னுரிமையை பலர் விளம்பரப்படுத்தி தங்களை மேன்மையானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். இந்த விளம்பரங்கள் உண்மையானதா என்ற கேள்வியும் தொடர்ந்து  சந்தேகங்களாய் கிளம்பி வருவதுண்டு.

இது போன்று பல உணவுப்பொருட்களுக்கு விளம்பரங்கள் சாதாரணமாகிவிட்டன .இவை வாங்கும் நுகர்வோருக்கு மலைப்பிரதேசங்களில் தங்கி மகிழ்ச்சியாய் இருக்க இடம் வசதி போன்றவை காட்டப்பட்டு வலையில் விழ வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு தரம்  ஒரு வலையில்  மாட்டிக்கொண்ட அனுபவம்  எனக்குமுண்டு.

 தொடர்ந்து இயற்கை விளைபொருட்களை வாங்கினால் மூணாறில் மூன்று நாட்கள் தங்கும் வசதி இலவசம் என்ற அறிவிப்பும் எனக்கும் வந்தன. நான் ஒரு கடையில் வாங்கும் இவ்வகைப்பொருட்களுக்கான அங்கீகாரமாக நானும் எடுத்துக்கொண்டேன்.

இப்படி ஆறு மாத குறுஞ்செய்திகளுக்குப் பின் நான் தேர்வானதாகத் தகவல் வந்து நான் தங்க ஆசைப்படும் இடத்தின் முகவரி , கைபேசி எண் தரப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு நான் வாடிக்கையாளராக இருக்கிறேன் என்பதற்கான ஊக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

மூணாறு நகரத்திலிருந்து 20 கிமீ தள்ளி  லோயர் கனால் என்ற பகுதி இருக்கும் அந்த விடுதிக்குச் செல்வதற்கு நான்  300 ரூபாய் செலவு செய்தேன்.திருப்பூரிலிருந்து மூணாறுக்கு செல்லவே பேருந்துக்கட்டணம்  ரூ 170 தான் . அங்கு சென்ற பின் அறை மட்டும் இலவசம் என்றார்கள்.

மலைப்பகுதி.தாறுமாறாய் பெரும் பாறைகள். குன்றுகள் போன்றத் தோற்றங்கள் தூரத்துப்பார்வைக்கு அழகாகவே இருந்தன 200 அறைகள் கொண்ட பல கட்டிடங்கள் வெவ்வெறு இடங்களில் . அதில்                 இருவர் தங்கும் அறையில் எனக்கு இடம் தரப்பட்டது. உணவு விடுதியின் பட்டியல் விலையேடு தரப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. எல்லா உணவுப்பொருட்களும் மிக அதிக விலையில் குறிக்கப்பட்டிருந்தது.  மூணாறு நகரில் நட்சத்திர விடுதியில் தங்கும் செலவு போல ஆகிவிட்டது. அங்கிருந்து யானை இறங்கும் பள்ளம் முதற்கொண்டு எங்கு செல்லவும் டாக்சிதான். மூன்று  நாள் தங்கலில் பகல் நேரத்தில் அதிகத் தூக்கம், கொஞ்சம் உலாவல் என்று பொழுதைக்கழித்து விட்டு திரும்பினேன்.

அப்போதுதான் நான் தங்கியிருந்த அப்பகுதிக்கு அருகிலிருந்த பல முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் விடுதிகள் பற்றி அறிந்தேன். அங்கு வர அந்த நிறுவனங்கள் ஆசை காட்டி வரவழைத்து விடுகிறார்கள். உணவு விடுதிக்கும் நான் தங்கியிருக்கும் இடத்திற்கும் அரை கி மீ தூரம். செங்குத்தான பகுதி. உணவுக்காக ஏறி இறங்கும்போது  மூச்சிரைப்பாகி உடம்பு செய்த சிரமம் சொல்லி மாளாது.

 குறைந்த நபர்களே தங்கியிருந்ததால் ஒரு வகையில் பய உணர்விலேயே இருந்தேன். அறையிலிருந்த இன்னொருவர்  தொடர்ந்து குடித்தபடியும் பின் நன்கு  தூங்கப்பழகி இருந்தார். அவருக்கு எதுவுமே உறுத்தலாகப்படவில்லை. மலையாளி என்பதால்யாரையாவது அழைத்து ஏதாவது பேசுவதில் அவருக்குப் பொழுது கழிந்தது.

. மூன்று நாளைக்கான முன் பணத்தினைக் கட்டிவிட்டோம் என்பதால்  மூன்று நாட்களுக்குப்பின்னாலேயே அங்கிருந்து கிள்ம்பினேன்

அங்கிருக்கும் போது உங்கள்கையால் ஒரு மரம் நடுஙகள் என்றார்கள். நட்டேன். என் பெயரைப்போட்டு ஒரு துண்டு சீட்டு ஒன்று அங்கு தொங்கியது. ஆண்டிற்கொருமுறை இங்கு வந்து இதன் வளர்ச்சியைக்கண்காணிக்க வேண்டும் என்றார்கள்.ஆண்டுதோறும் நான் வந்து செல்ல வேண்டுஎன்ற வகையில் கட்டாய அழைப்புகளாக  அவற்றைப்பார்த்தேன்

அதன் பின்னால் அந்த விடுதி, மற்றும் அந்த நிறுவனங்களிலிருந்து   குறுஞ்செய்திகள் வந்தன.  இப்படி  உதாரணத்திற்கு :

Hungry evil Carnivorous plant in Pot

1.சூழலியல் பாதுகாப்புக்காக நீங்கள் முன்னெடுப்பாய் இறங்கியிருப்பது நல்லது. அதற்கான உறுப்பினர் அட்டை அனுப்பப்படும்

 1. சூழலியல் பாதுகாப்பு சார்ந்த இவ்வாண்டின் திட்டங்கள் இவை.இவற்ரில் கலந்து கொள்ளுங்கள் என்று ஒரு ஆண்டிற்கானச் செயல் திட்டம் இருந்த்து.
 2. அவர்கள் அனுப்பிய கடிதங்கள், பின் இணைப்புகளிலிருந்த மலைகள், மரங்கள் இயற்கைக்காட்சிகள் அந்த இடங்களைத்தேடியும் அவர்களை  தேடியும் அலையச்செய்யுமாறு கவர்ச்சியாக இருந்தது.
 3. சுற்றுச்சூழலுக்கு இணக்கமாய் நீங்கள் தங்கியிருந்தீர்கள் உங்களின் கீழ்க்கண்ட் செயல்கள் அதற்கு ஆதாரமாக இருந்தன என்று ஒரு பட்டியல் இட்டிருந்தார்கள்.அதில் நான் மரம் நட்டிருந்தது ஒன்று
 4. பின்னர் மறுசுழற்சி செய்தல் சம்பந்தமான ஒரு கருத்தரங்கிற்கு அழைக்கிறோம் என்று அதே மூணாறு இட வசதி பற்றி ஒரு கடிதமும் வந்தது.
 5. அந்தக் கடிததத்தில் பலவேறு நிபந்தனைகள்,நட்சத்திர குறியீடுகள் ,  மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் போடப்பட்டிருந்தன.அது ஏதோ பின்னல் வலை என்பதை யூகித்து  நான் கையெழுத்திட்டு அனுப்பவில்லை
 6. சூழலைப்பாதுகாக்கிற நுகர்வோராக பல நட்சத்திர அந்தஸ்துடன் நான் விளங்க பல ஆலோசனைகளைச்சொல்லியிருந்தார்கள்

விளம்பரங்களை, நிபந்தனைகளை நம்பி  அவற்றைப்பின் தொடர எனக்கு விருப்பமில்லை

சூழலியல் கண்துடைப்பு  சொற்றொடர் அவ்வப்போது மனதிலும் வந்து போனதால் அதிலிருந்து விலகிக்கொண்டேன் .

நிஜமாகவே சூழலியலைப்பாதுகாக்கும்பொருட்களை இனம் கொண்டு கொள்ள ஒரு சிறு அனுபவமாக   அவை யெல்லாம் இருந்தன

நுகர்வோர் விழிப்புணர்வு என்று சொல்லப்படுகிற போது நுகர்வோர்  உரிமை என்பதும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது

நுகர்வோர் உரிமை சார்ந்த கருத்துக்கள் அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியின் காலத்தில் வேரூன்றத்தொடங்கியது

கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்  என்பதை சிலர் இப்படிக் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்கள்:

பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை உயிருக்கும்சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.

 • தெரிவு செய்து கொள்ளும் உரிமை- விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான a.
 • தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை-

விளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள்  மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலைநிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.

 • கவனத்தை ஈர்க்கும் உரிமை-

ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.என்று கொள்ளப்படுகிறது

இதையொட்டி சர்வதேச நுகர்வோர் என்போர்  முத்திரையிடப்பட்டுள்ளார்கள் .

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்]

 • அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
 • நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
 • சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
 • சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.

நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம் கீழ்க்கண்டவற்றிலும் இனம் காணப்பட்டுள்ளது

 1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார்.இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.
 2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.
 3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
 4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.