மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அரசு மீது நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடுதல் அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்:
1) நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்
2) நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக எண்ணிக்கை நடத்தித்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவிக்க வேண்டும்
3) இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்பதால், தொலைக்காட்சிகளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை நேரலையில் காட்ட வேண்டும்.
4) இப்போதைய சபாநாயகரைத் தவிர்த்துவிட்டு, இடைக்கால சபாநாயகரைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலமாகத்தான் வாக்கெடுப்பு நடக்க வேண்டும். .
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் முன்பாகவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இவ்வாறு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

பட்னாவிஸ் அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்கக் கூடாது என்ற சிவசேனாவின் புதிய மனு மீது உச்சநீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.