மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்ததன் விளைவாக, பொருளாதாரத்தைப் புதுப்பிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. இந்த சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்குப் பெரிய அளவிலான வங்கிகள் தேவை என்றும், வங்கிகளின் மேலாண்மை மற்றும் செயல்திறன் மற்ற வங்கிகளுடனான போட்டித்திறனுக்கு வழிவகுக்கும் என்றும், இந்த இணைப்புகள் குறித்து அரசாங்கம் சில காலமாக பேசி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதன்படி பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்த கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இந்த இணைப்புகளின் விளைவாக ஏற்படக்கூடிய சினெர்ஜிகளைப் பற்றி, நிதி அமைச்சர் ஒரு விலாவாரியா பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி மூலம் விளக்கியிருந்தார். விரிவான அந்த அறிக்கையில், குறிப்பிட்ட இந்த வங்கி குழுக்கள் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு விளக்கங்களும் கூறப்படவில்லை.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிகள் இனிமேல் யுனைடெட் வங்கி எனவும், சிண்டிகேட் வங்கி இனி கனரா வங்கி எனவும், அலகாபாத் வங்கியுடன் இந்தியன் வங்கியாகவும்,  யூனியன் வங்கியுடன் கார்பொரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வங்கிகள் இணைப்பினால் ஏற்படப்போகும் முதல் நன்மை என்னவென்றால்..

குறிப்பிடப்பட்ட அனைத்து வங்கிகளின் டிஜிட்டல் தளங்களும், இனி பொதுவானவையாக இருக்கும், இது அந்தந்த வங்கிகளின் தொழில்நுட்ப கட்டமைப்பை விரைவாக ஒருங்கிணைத்து தேவையான அறிக்கைகளை விரைவில் பெற உதவும். இன்றுவரை, பல பொதுத்துறை வங்கிகள் பிற நிதி தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்காக டிமேட் கணக்குகள் அல்லது ஈ-பேங்கிங் அல்லது தொலைபேசி வங்கி சேவைகளைத் திறம்பட வழங்குவதில்லை. இதற்கு மேல் இந்தக் கட்டமைப்பை உருவாக்க இந்த இணைப்பு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தென்னிந்தியாவில் அதிகளவில் காணப்படும் இந்தியன் வங்கியை கிழக்கிந்தியாவின் அலகாபாத் வங்கியுடன் இணைப்பதன் மூலம் மிகப்பெரிய கிளைகளைக் கொண்ட நிறுவனமாக மாற வாய்ப்புள்ளது. அதேபோல் கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இந்தியாவின் மேற்கு பகுதிகளில் பலமானவைகளாக உள்ளன. ஆனால் ​மற்ற இரண்டு வங்கிகளின் இணைப்பில் இதுபோன்ற சாதகமான எதுவும் காணப்படவில்லை என்றே கூறப்பட வேண்டும்.

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். அதிக டிஜிட்டல் மற்றும் காகிதமில்லாத வங்கி பரிமாற்றங்களை நோக்கிய ஒரு நகர்வு இருப்பதால், வங்கிகளின் ஒருங்கிணைப்பு சினெர்ஜி மற்றும் இதேபோன்ற அளவிலான நிறுவனங்களிடையே சில போட்டிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறலாம். மேலும் வங்கிகளின் இந்த இணைப்பு நடவடிக்கைகளால், வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு . நிகர வராக்கடன்களின் மொத்த சொத்து வழங்கல் ஆகியவை வங்கிகளில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவாது என்றே கூறலாம். இந்தியன் வங்கியைப் பொறுத்தவரையில், நிகர வராக்கடன் சொத்துக்களின் எண்ணிக்கையானது, இந்த இணைப்பிற்குப் பிறகு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் வணிக வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளைப் பொறுத்தவரை, எதிர்காலம் மட்டுமே சரியான பதிலை சொல்லும். நான்கு இணைப்புகளில், சில வங்கிகளுக்கு பல நன்மைகள் உள்ளன, மற்றவைகளுக்கு இனி ஒரு கடினமான பயணமாகவே இருக்கும் என்பது தெளிவாகிறது. ஏனெனில் பாங்க் ஆப் பரோடா வங்கியுடனான இணைப்பு இன்னும் நிதிச் சந்தைகளை உற்சாகப்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும்,

ஒருங்கிணைந்த பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஒரு பங்கு ரூ. 150 இலிருந்து 90 ரூபாய் வரை குறைந்துவிட்டன. இதே போன்று நிலையிலேதான் இணைக்கப்படுகின்ற இந்த வங்கிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளை இணைப்பதன் விளைவாக பங்குச் சந்தையின் வணிக செயல்திறன் அதிகரித்துள்ளன என்பதற்கான சமிக்ஞைகள் இதுவரை எதுவும் எழவில்லை.

அடுத்ததாக, வங்கிகளின் நிர்வாகத்திற்கு எந்த அளவுக்கு சுய அதிகாரம் கிடைக்கப் போகிறது என்பது ஒரு பெரும் கேள்வியாகவே எழுகிறது. வங்கிகளின் இயக்குநர்கள் முடிவெடுக்கும் சுதந்திரம் குறித்த செய்திகள் சிறிதளவு கூட வெளியிடப்படவில்லை. இதன்மூலம் கடன் அபாயங்களைத் தவிர்ப்பதற்கான தற்போதைய மந்தநிலையே தொடரும் என்றுதான் கூற வேண்டும்,

காரணம், மத்தியில் கடந்த 2013 வரை பல இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் கடன் வழங்கியதன் காரணமாக வங்கிகள் மிக அழுத்தமான இருப்புநிலைகளை எதிர்கொள்கொண்டுள்ளது. அரசின் ஒழுங்குமுறை அறிப்பு தாமதங்கள், செலவினங்கள் உயர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தல் போன்ற பிரச்சினைகள் காரணமாக கட்டுமான திட்டங்கள் பல பாதியிலேயே நின்றுவிட்டது.

இனியும் வங்கிகள் கார். வீடு மற்றும் நுகர்வோர் சில்லறை கடன்களில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், உள்கட்டமைப்பை வளர்க்க அரசு எடுத்து வரும் நோக்கங்கள் நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது. இந்த இணைப்புகள் முடிவதற்கு அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகலாம், மேலும் புதிய வங்கிகள் தங்களை புதுப்பித்துக்கொள்வதற்க்குள் . தற்போதைய பொருளாதார மந்தநிலைகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிட்ட காலதாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழில் மற்றும் உற்பத்தி துறைகளில் பெரிய முதலீடுகள் இல்லாமல், உற்பத்தி மற்றும் தொழில்துறையை புதுப்பிக்க வாய்ப்பில்லை. ஆக கூடிய விரைவில் வங்கிகள் பெரிய அளவிலான முதலீட்டுகளுக்கு வழி வகை செய்யவில்லை எனில் அதன் வளர்ச்சி தடுமாற்றப் பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை .

அரசு அறிக்கைகளை பொறுத்தவரை, இந்திய பொருளாதாரத்தில் புதிய முதலீட்டாளர்களுக்கு அச்சம் உள்ளது என்றே கூறுகின்றனர். அதனால் உற்பத்தி வளர்ச்சி பூஜ்ஜியமாகவே உள்ளது எனவும். அதனால் கடன் வழங்கல்கள் குறைவாகவே உள்ளதாக தெரிந்து கொள்ள முடிகின்றது.

அதே நேரத்தில், வங்கிகளுடன் போதுமான பணப்புழக்கம் உள்ளது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் கூறியிருக்கிறார். அதன்படி தங்களால் ரூ .2 லட்சம் கோடி வரை கடன் வழங்க முடியும் என்று கூறினார், ஆனால் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு அளவிற்கு கடன் முகாந்திரமும் கொடுக்கப்படும் என்று, முதலீடு செய்யக்கூடிய திட்டங்களை பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை.

ஆட்டோமொபைல் துறையில் கார்கள் விற்பனை 11 சதவிகிதம் குறைந்துவிட்டது, அதன் மூலம் பெரிய அளவிலான வங்கிகளின் கடன்கள் முற்றிலும் தடைபட்டுள்ளது, அதுமட்டுமின்றி கார்கள் உற்பத்தியும் 30 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைகிறது என்கிற செய்தி வாகனக் கடனை வழங்கி வந்த வங்கிகளுக்கு ஒரு பெரும் பின்னடைவையே ஏற்படுத்துகிறது.

அதேசமயம், இந்த தாராளமயமாக்கல் செயல்பாட்டினால் , கிளைகளை இணைப்பதற்கும், பணியாளர்களை மறுசீரமைப்பதற்கும், தன்னார்வ ஓய்வூதிய திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு இந்த வங்கிகளின் நிர்வாகத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் செலவு செயல்திறனைப் பொறுத்தவரை வங்கி இணைப்பின் நன்மை கிடைக்காது.

சுருக்கமாகச் சொன்னால், இந்த வங்கிகளை ஒன்றிணைக்கும் முடிவு நன்கு சிந்திக்கப்பட்ட ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை, சிலவற்றை தனியார்மயமாக்குவதற்கும் வங்கி அமைப்பில் வலிமையை உருவாக்குவதற்கும் பின்னணி உள்ளது, ஆனால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சரிசெய்யவோ அல்லது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவோ இந்த இணைப்பு சாத்தியமில்லை என்றுதான் கூற வேண்டும் .