மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஐ.ஏ அமைப்பிற்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்தின் அடிப்படையில், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) தற்போது தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயத் உள்ளிட்ட 4 பேரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்திருக்கிறது. இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள்.

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களிலிலும் தொடர்புடைய ஹபீஸ் சயீத், அமெரிக்க அரசால் கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

மேலும், 2000இல் டெல்லி செங்கோட்டை தாக்குல், 2008 ராம்பூர் மற்றும் மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஸகி உர் ரகுமான் லக்வி-யும் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் பேரவை, பதான்கோட் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்திய மசூத் அசாரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.