இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், 82.03 லட்சம் கோடி ரூபாயிலிருந்த இந்தியாவின் மொத்த கடன். மூன்றாவது காலாண்டின் இறுதியில் 83.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மூன்றாவது காலாண்டு டிசம்பர் 2018 இறுதியில் அரசின் மொத்த கடனில், (பப்ளிக் டெப்ட்) பொது கடன் 89.5 சதவிகிதமாக உள்ளது.

பங்குச் சந்தையில் கடந்த வார நிகழ்வுகள்

குஜராத் மாநிலத்தின் புதிய காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதலில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளதால், தற்போதைய நிலையில் அந்தத் திட்டத்தை ஏற்க இயலாது என காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களோடு பயணித்த இந்திய பங்கு வர்த்தகம். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் மற்றும் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டும் எதிர்வரும் வாரங்களில் குறுகிய கால முதலீடுகளுக்கான, தேசிய பங்குச் சந்தையான நிப்டி 10700 புள்ளிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த வாரத்தில் எதிர்பார்த்தது போலவே எஸ்பிஐ யின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாயின.

இருந்தாலும் சிறு முதலீட்டாளர்கள் ஐடிசி  இன்ஃபோசிஸ்  போன்ற நிலையான பங்குகளில் முதலீடு செய்வது லாப நோக்கோடு பயணிக்கும் என பங்கு வர்த்தக நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி  உயர்ந்து வர்த்தகமாகி இருந்தாலும், இந்த வாரத்தில் மந்தமான நிலையே நீடிக்கும் என பங்குச்சந்தை நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் வங்கி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பங்குகளின் வர்த்தகம் ஏற்றதோடு பயணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சர்க்கரை உற்பத்தி, செப்டம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி வரை, 24.77 மில்லியன் டன்னாக உயர்ந்து 6.9%  வீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

Brent Crude ஆயில் விலை முந்தைய வாரத்தில் பேரலுக்கு 65.8 ரூபாய் உயர்ந்துள்ளது

கடந்த வார இறுதியில்  ஒரு அவுன்ஸ் தங்கம்1309 டாலராக இருந்த நிலையில்,  இந்த வாரம் 1290  டாலராக குறைந்துள்ளது.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, ​​பாண்ட் பண்டுகளின் முதலீடு 7.56% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அளவில் ஏற்றுமதியாகும் பருத்திகளின் தரத்தை விட இந்திய பருத்தியின் தரத்திற்கு  சீனாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால்  ஒரு பவுண்ட் பருத்தி 80 முதல் 81 சென்ட் விலையில் சீனத்திற்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலகின் மற்ற நாடுகளில் இருந்து பருத்தி விலை சீனாவில் 78 லிருந்து79 சென்டாக இறக்குமதி செய்வது குறிப்படத்தக்கது

எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு. எதிர்வரும் காலங்களில் அதிகப்படியான தேவைகளை கருத்தில் கொண்டு புதிதாக விரிவாக்கம் செய்யும் சர்க்கரை ஆலைகளுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 355 கோடியிலான வட்டியினை தள்ளுபடி செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது, மத்திய அமைச்சரவையின் கேபினட் குழு.

மாருதி சுசூகி விலை 1% உயர்ந்து வாகனத் துறையின் சந்தை மதிப்பு ரூ. 290 கோடியாக வர்த்தகமாகின.

டாடா மோட்டார்ஸ், விப்ரோ  3% வீழ்ச்சி கண்டுள்ளது.

என்.டி.பி.சி மற்றும் பொதுத்துறையின்  வங்கிகளின் பங்குகள் முன்னேற்றம் அடைந்து,

கடந்த வாரத்தின் இறுதி நாளில் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 36,653 புள்ளிகளோடு வர்த்தகம் தொடங்கியது. நாளின் இறுதியில் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிந்தது.

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாட்டா ஸ்டீல், ஜின்டால் ஸ்டீல், பவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் தொடர்ந்து உயர்ந்து 2 சதவீதத்தை எட்டியுள்ளன.

ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல், வேதாந்தா மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்துள்ளன.

டாடா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர், தாய்சன் சுமி சிஸ்டம்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், பாரத் ஃபோர்ஜ் மற்றும் அஷோக் லேலண்ட் ஆகிய பங்குகள் அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாயின.

விப்ரோ, ஹெச்டிஎல் டெக், இன்ஃபோசிஸ் மற்றும் பிர்லா சாப்ட்வேர் ஆகிய பங்குகள் குறுகிய இழப்புடனும்.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, பிஎன்பி, ஓ.பி.சி, ஐடிபிஐ வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை பி.எஸ்.டி வங்கியிடம் இருந்து அதிக இழப்புக்களோடு வர்த்தகமாகின.

இருப்பினும், நிப்டி ரியால்டி நிறுவனம் யுனிடெக், சுண்டெக் ரியால்டி, பீனிக்ஸ் மில்ஸ், ஓபரோய் ரியால்டி, கோத்ரேஜ் ப்ராடக்ட்ஸ் மற்றும் பிரிகேட் எண்டர்பிரைசஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்து வர்த்தகத்தில் அதிக பங்களித்து, நிப்டி, ஐசர் மோட்டார்ஸ், டைட்டான் கம்பெனி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் கெயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள், விப்ரோ, டாட்டா மோட்டார்ஸ், வேதாந்தா, ஹிண்டால்கோ மற்றும் டாக்டர் ரெட்ஸி லேப்ஸ் ஆகியவற்றில் அதிக லாபம் ஈட்டின.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பினான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, லார்சன் & டூப்ரோ ஆகியவை மிக அதிகமான அளவிலான எண்ணிக்கையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அலாகாபாத் வங்கி, ஹைடெல்பர்க் சிமெண்ட் இந்தியா, ஐபிசிஏ ஆய்வகங்கள், முத்துத் ஃபினான்ஸ், ரெஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அனூப் இன்ஜினியரிங், பில் எரிசக்ட் சிஸ்டம்ஸ் மற்றும் கன்டாபில் சில்லறை இந்தியா ஆகியவற்றில் தேசிய பங்குச் சந்தையில் புதிய 52 வார உச்ச நிலையை அடைந்து வர்த்தகமாகின.

ஈக்கிவிட்டி சந்தையில்  721 பங்குகள் முன்னேற்றம் அடைந்தும் 989 பங்குகள் சரிந்தும், 364பங்குகள்  சம நிலையிலும் வர்த்தகமாகின்றன..

பிஎஸ்இ இல் உள்ள 1071 பங்குகளில் 1449 பங்குகள் சரிந்தும் 142 சமநிலையிலும் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

தேசிய பங்குச் சந்தைகள் மார்ச் 11 ஆம் தேதி முதல் வாராந்திர செய்திகள் தொடங்கும் நிலையில்,

நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் பங்குகள் மிக கவனம் செலுத்தப்படுகின்றன.

நிஃப்டியில்  IT துறையின்  தொடர்ச்சியாக வாராந்திர அந்நிய செலாவணி பரிமாற்றம் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

இன்ஃபோசிஸ் நிஃப்டி ஐடி குறியீட்டு எண் அதிகபட்சமாக  25.44 சதவிகிதம் உயர்ந்தும்,

முறையே ஹெச்டிசி டெக் (16.68%) மற்றும் விப்ரோ (11.85%) ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது.

பங்கு சந்தை ஆலோசனைகள்

ஃபேம் 2 என்கிற திட்டப்படி  ஏப்ரல் 1 2019 முதல் அமலில் வரவுள்ள ஆட்டோமொபைல் கனரக வாகன உற்பத்தியாளருக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளபடியும். குறிப்பாக பேருந்து உற்பத்தியாளர்களுக்கு 40 சதவிகிதமும். மீதமுள்ள இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு 60 சதவிகிதமும்  சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு  உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும், வாகன உற்பத்தியில் செலவினங்களை குறைக்கும் வகையிலும் மக்கிய மத்திய அரசின் புதிய திட்டம்  முன்னெடுக்கப்படுகிறது

அமெரிக்க சந்தை வர்த்தகச் செய்திகள்

சர்வதேச சந்தையில் ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பொருளாதார வளர்ச்சி கணிப்புக்களை குறைத்து, இந்திய பொருளாதாரத்தில் நிலையில்லாத தன்மையை மேற்கோள் காட்டி, அமெரிக்க சந்தைகளில் வார இறுதியில் அதன் வர்த்தகம்

ஐரோப்பிய பணவீக்க வளர்ச்சி  1.7% இலிருந்து 1.1% ஆக குறைந்துள்ளது.,

அதே நேரத்தில் அடுத்த ஆண்டின் பணவீக்கம் 1.7% இலிருந்து 1.6% ஆகக் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள் கடந்த வாரத்தில் குறைந்து வர்த்தகமாகின.

இது சீனா எதிர்பார்த்த ஏற்றுமதியில்  ஜனவரி மாதம் ஜெர்மனியின் தொழிற்சார்ந்த பங்குகளின் சரிவு போன்ற பலவீனமான மேக்ரோ குறியீடுகள் காட்டியதில் முதன்மையாக இருந்தது.

சீன ஏற்றுமதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20.7% சரிந்தது, அதே நேரத்தில் ஜெர்மனியின் தொழிற்துறையில் கடந்த ஏழு மாதங்களில் வீழ்ச்சியடைந்ததும்.

கூடுதலாக, ஐரோப்பிய மத்திய வங்கி யூரோப்பகுதியின் வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பைக் குறைத்த பின்னர் உலகப் பொருளாதாரம் பற்றிய தேக்க நிலையால் முதல் வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு மந்த நிலையைக் காட்டின.

நிஃப்டி 50 வது தொடர்ந்து  மூன்றாவது வாரமாக முன்னேற்றமடைந்து வர்த்தகமாகியது

பொதுத் தேர்தல் நெருங்குவதால் தேசிய நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் வர்த்தகம் எச்சரிக்கையுடன் தொடர்ந்து முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மியுச்சுவல் ஃபண்டு முதலீடுகள்

பரஸ்பர நிதி நிறுவனங்களின் மேலாண்மை (AUMs) வருமானம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 0.89 சதவீதம் குறைந்து, நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ. 23.16 லட்சம் கோடியாக வர்த்தகமாகின..

தொழில்துறை சார்ந்த பேலன்ஸ்டு  ஃபண்டுகளிலும் மற்ற பேலன்ஸ்டு-சார்ந்த ஃபண்டுகளின் முதலீட்டு  வருவாய் கடும் வீழ்ச்சியைக் கண்டு பயணிக்கிறது.

வாடிக்கையாளர் பண எடுப்பு எனப்படும் மியுச்சுவல் ஃபண்ட் அவுட்ஃப்ளோ ஜனவரி மாதத்தில் ரூ. 952 கோடியிலிருந்து பிப்ரவரி மாதத்தில் ரூ. 1,077 கோடியாக அதிகரித்துள்ளது.

நிகர முதலீடு மற்றும் எம்.டி.எம். (மார்க்கெட் டூ மார்க்கெட்டிங்)  வருமான இழப்புகள் ரூ. 2,825 கோடியாக உயர்ந்தது , இது பரஸ்பர நிதி நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பில் 1.61 சதவீதம் ஆகும்.

பிப்ரவரி மாதத்தில், பரஸ்பர நிதி பங்குகளின்  வருவாய் ரூபாய்.4,640 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடிப்படை சந்தைகளில் ஏற்ற இறக்கம் காரணமாக, சமீபத்திய மாதங்களில் ஈக்விட்டி நிதிகளின் வருவாயானது பரவலாக உள்ளது.

முந்தைய இரண்டு மாதங்களில், (Equity Fund) ஈக்விட்டி ஃபண்ட்டுகள் ரூ. 5,082 கோடி முறையே  4,442 கோடி எனவும், இதற்கு முந்தைய 32 மாதங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளில் சராசரியாக மாத முதலீடு ரூ .10,000 கோடிக்கு குறைவாகவும் இருந்திருக்கிறது.

2018 பிந்தைய காலாண்டில் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள்‌ டெப்ட் பண்டு எனப்படும் கடன் நிதிகள் பத்திரங்களில் முதலீடு செய்யாமல் வெளியேறி இருக்கிறார்கள்.

கடன் நிதிகள்

கடன்பத்திரங்கள், கடன் நிதிகள் 1.714 கோடி ரூபாய்க்கு ஏலம் குறைந்து, 0.25 சதவீதம் சரிந்து ரூ. 6.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குகளின் இலக்கு மற்றும் விற்பனை விலை

எதிர்பார்த்தபடி தொடர்ந்து மூன்றாவது வாரமாக கடந்த வாரம் எஸ்பிஐ  3 சதவிகிதம் உயர்ந்து.

வரும் வாரத்தில் அதன் இலக்கு  ₹ 280-279  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. stop loss எனப்படும் நஷ்ட ஈடு ₹ 272  என வர்த்தகர்களால் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வரும் வாரங்களில் 272 ற்கு கீழே வீழ்ச்சி ஏற்படாது எனவும் இடைத்தரகர்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐடிசி 5.1 சதவிகிதம் உயர்ந்து கடந்த வாரம் 284 என உயர்ந்து வர்த்தகமாயின.

இந்த பங்குகள் வரும் வாரங்களில் பங்குச் சந்தை தரகர்களால் அதிகபட்சமாக 292 ரூபாய் உயரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் (₹ 712.55)

கடந்த வாரம் 3.8 சதவீதம் சரிந்தது இந்த பங்குகள்.

விப்ரோ பிஎஸ்இ யில் தனது பங்குகளை அசீம் பிரேம்ஜி டிரஸ்ட் நிறுவனத்திடம் 2,66,66,667 எண்ணிக்கையுள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்.

DHFL: Brickwork  AA+ (எதிர்மறையான மதிப்பீடு பெற்றுள்ளது)

இந்தியாவில் ரூ. 29,000 கோடி மதிப்புடன்  NCD இல் தரமதிப்பீட்டை மதிப்பீடு செய்தது

Bharath Electronic 2018-2019 நிதியாண்டில் ஒரு பங்கிற்க்கு 70 பைசா வீதம் இடைக்கால டிவிடெண்டு அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்: ஜாகுவார் லேண்ட் ரோவர் உட்பட பிப்ரவரியில் உலக வர்த்தகத்தில் மொத்த விற்பனை 9 சதவீதம் குறைந்து 1,10,262 யூனிட்டுகளாக சரிவை கண்டுள்ளது..

ஆயில் இந்தியா: திரிபுரா மற்றும் கேஜி ஆஃப்ஷோர் ஆகிய இரண்டு எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்புதல் கையெழுத்திடப்படது.

சன் டிவி நெட்வொர்க்: 2018-19 நிதியாண்டுக்கு 5 ரூபாய் பங்கிற்கு ரூபாய் 2.50 என நான்காவது இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.