தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா கடந்த புதன்கிழமை இதை அறிவித்தார்.   நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுப்பதற்கான தலைவர்களை உருவாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

நமது நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக, அமைச்சரவையில் பாதி பெண்களாக உள்ளனர், “என ராமபொசா ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னாள் கேப் டவ்ன் மேயரும் “குட்” எனும் அரசியல் கட்சித் தலைவருமான பட்ரிஷியா டி லில்லி,பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வியாழனன்று புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியேற்றதும் பெண்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.

அமைச்சரவையில் உள்ள எண்ணிக்கையை 36 இல் இருந்து 28 ஆகக் குறைத்தார் ராமபொசா.  இதற்கு அவர் இந்த குறைப்பு அவசியம் இதனால் அரசின் வீக்கம் குறைக்கப்படும் என்றார்.

“இந்த முடிவைப் பலர் பாராட்டினாலும், விமர்சகர்கள் ராமபொசா தன்னுடைய அதே அமைச்சர்களைத்தான் அவர் இலாகா மாற்றிக் கொடுத்திருக்கிறார்” என்றனர்.

ஸோலனி டூப் எனும் அரசியல் ஆய்வாளர், “அரசாங்கங்கள் பாலின சமநிலைக்காகப் போராடுவது பாராட்டத்தக்கது. அதே நேரம் அரசியல் நியமனங்கள் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் இருக்க வேண்டும்.” என்றார்.

அதிபர் அறிவித்த பெண்களில் பெரும்பாலோனோர் பல ஆண்டுகளாகவே பொறுப்பில் இருப்பவர்கள்தான். இந்த நாட்டில் எந்த விதமாக மாற்றத்தை உருவாக்க அரசு நினைக்கிறது என நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.    என டுயூப் சி.என்.என் செய்தி நிறுவனத்துக்குச் சொன்னார்.

நாம் வித்தியாசமான பார்வைகள் கொண்ட புதிய பெண்களை அறிமுகப்படுத்த வேண்டும்.  தென் ஆப்ரிக்கா எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என அறிந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.  எனவும் அவர் கூறினார்.

“எதிர்க்கட்சி தலைவர் ம்யூசி மய்மானே  இந்த நியமனங்கள் அதிபரின் அரசியல் அனுகூலங்களைத்  திருப்திப்படுத்துவதாகவே  இருக்கிறது”. என்கிறார்.

இந்த கட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு மாறுபட்ட, திறமையான அமைச்சரவைக்குத் தகுதி உடையது அதற்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் தென்னாப்பிரிக்கா முன்னெடுத்துச் செல்ல தேவை. என மய்மானே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மய்மானே, தான் ஒரு நிழல் அமைச்சரவையை நிறுவி அதற்கு அரசாங்கத்தைப் பொறுப்பேற்க வைப்பதாகக் கூறினார்.