வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் குறியீட்டெண் மதிப்பிடப்பட்டது. பி.எஸ்.இ. சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து 37,185 புள்ளிகளைத் தொட்டது, நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்தது, 11,181 புள்ளிகளாக இருக்கிறது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், இன்ஃபோசிஸ், என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தோடும்.
முறையே சன் பார்மா, இண்டஸ்ஐண்ட் பாங்க், எம் & எம், கோல் இந்தியா மற்றும் கோடக் பாங்க் நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்ற இறக்கம் கண்டுள்ளது இந்திய பங்குச்சந்தை. மே 23 க்கு முன்னோக்கி செல்லும் போது, வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் தொடக்கத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து 37,185 புள்ளிகளாக உள்ளது.
காடிலா ஹெல்த்கேர் லிமிடெட் பங்குகளின் விலை 4.2 சதவீதம் குறைந்து 249.5 ரூபாயாக வர்த்தகமாகிறது, அக்டோபர் 1, 2014 வரையிலான காலத்தில் இதுவே குறைந்த விலையாகும் .
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பங்கு 9 சதவீதம் குறைந்து 25.05 ஆக உள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட் தற்போதைய விலை: 4,347
இலக்கு: 5,028
இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உலகின் முன்னணி சிமென்ட் தயாரிப்பாளர்களுடாகவும் திகழும். அல்ட்ராடெக் சமீபத்திய நிதி செயல்திறன், மதிப்பீடு மற்றும் வருங்கால வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பங்கின் இலக்கு 5,028 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் காப்பர், டிரைரிங் கார்ப்பரேஷன், பிஹெச்இல், ஆயில் இந்தியா, ஐ.ஓ.சி., நியூ இந்தியா அஷூரன்ஸ், என்.எச்.பீ.சி. மற்றும் என்.ஐ.ஓ.எல். உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு பல்வேறு காரணிகளால் தேசிய பங்குச் சந்தையால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டாய்ச்ட் பேங்க் டாட்டா கெமிக்கல்ஸ் ஒன்றிணைந்த அறிவிப்பால் இந்த பங்குகளின் இலக்கு விலை உயர்ந்துள்ளது.
ஜுபிலாண்ட் உணவு நிறுவனம் நான்காவது காலாண்டின் நிகர இலாபம் 8.6% அதிகரித்து ரூ. 73.9 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் 68 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கரூர் வைஸ்யா வங்கி Q4 லாபம் 19% அதிகரித்துள்ளது
நிஃப்டியில் ஜீ எண்டெர்டெயின்மென்ட், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்.
சன் பார்மா, பார்தி ஏர்டெல், எஸ் பாங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பினான்ஸ் ஆகியவை இறங்கியும் வர்த்தகமாகிவருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 பைசா உயர்ந்து 70.26 ஆக உள்ளது.
டோரண்ட் பவர் லிமிடெட் பங்குகளின் விலை 6 சதவீதம் குறைந்து 231.05 ரூபாயாக உள்ளது.
எச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்டின் மூத்த ஈக்விட்டி நிதி மேலாளர் ஸ்ரீனிவாஸ் ராவ் ரவுரி பதவி விலகியுள்ளார்.