மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 203 புள்ளிகள் வீழ்ச்சியை கண்டு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. எஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் சராசரியாக 8% வீழ்ச்சியைக் கண்டுள்ளது இன்றைய தின வர்த்தகத்தில்.
சென்செக்ஸ் 37,114.88 புள்ளிகளாகவும் . நிஃப்டி 65 புள்ளிகள் குறைந்து 11,157 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.
மே 15 ம் தேதிக்குப்பிறகான வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் நிப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழே சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 982 பங்குகள் முன்னேற்றம் அடைந்தும், 1544 பங்குகள் சரிந்தும், 176 பங்குகள் மாறாமலும் வர்த்தகமாகியுள்ளது.
இன்றைய நிஃப்டி வர்த்தகத்தில் டி.சி.எஸ்., எஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஜீ என்டர்டெயின்மென்ட், ஜெ.எஸ்.டபிள்யு., ஸ்டீல் அண்ட் கெயில் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையான ஐ சரிவினை சந்தித்துள்ளன.
முறையே பஜாஜ் ஃபினான்ஸ், ஐசர் மோட்டார்ஸ், யூபிஎல், ஐஓசி மற்றும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே பட்ஜெட்டில் 15 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில், 700 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனைச் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி மற்றும் ரியால்டி துறை ஆகியவற்றின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனைய மற்ற துறை சார்ந்த குறியீடுகளும் எதிர்மறையாக இறக்கத்துடன் முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் உலோக பங்குகள் (2.08 சதவீதம்), டெலிகாம் (1.96 சதவீதம்), யுடிலிடிஸ் ( 1.69 சதவீதம்) மற்றும் பவர் (1.56 சதவீதம்) என துறைவாரியாக இறக்கம் கண்டு பயணித்தது .
இந்திய ரிசர்வ் வங்கி அதன் முன்னாள் துணை கவர்னர் ஆர். காந்தி, தனியார் துறை வங்கியான YES வங்கியின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2018 ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்திய வங்கியின் நிகர இழப்பு 190 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 132 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் செயல்பாட்டு இலாபம் 1,245 கோடி ரூபாயாக (கடந்தாண்டு ₨ 1,164 கோடி).