அழிதக்கன்றே தோழி! கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு    5
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி,
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, ”அடைந்ததற்கு
இனையல் என்னும்” என்ப மனை இருந்து,    10
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே.

 

ழகான ஒரு கடல்கரை,

அந்தக்  கடல்கரையில் அழகான  ஒரு சோலை,

அந்த சோலையில்  உயரமான ஒரு பனை மரம்,

அந்தப் பனைமரத்தில் பனம்பழம் குலைகுலையாக தொங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு குலையில் பனம்பழம் கனியப் பழுத்திருக்கிறது. அந்தப் பனங்குலையில் இருந்து  ஒரு பனம்பழம் நெட்டு  இல்லாமல்  கீழே விழுகிறது.

உயரமான அந்தப் பனைமரத்துக்குப் பக்கத்தில் அழகான  ஒரு தண்ணிக் கிடங்க இருக்கு. அந்தக் கிடங்கில் தண்ணி நெறைய இருக்கு. அல்லி இலைகள் அந்தக் கிடங்கு  தண்ணீரை முடிக்கொண்டிருக்க , கொக்குகள் ஏராளம் நின்றுகொண்டிருக்கின்றன  நிறைய அந்தக் கிடங்கில்.

உயரமான அந்தப் பனைமரத்தில்  இருந்து நெட்டு இல்லாமல் கீழே விழுந்த அந்தப் பனம் பழம் ஆழமான அந்தக் கிடங்குத் தண்ணீரில் விழுகிறது. தண்ணீரில் விழுந்த பனம்பழம் உடைகிறது. தண்ணீரை முடிக்கொண்டிருந்த அல்லி இலைகள்  நசுங்குகின்றன. தண்ணீரில் நின்றுகொண்ட்டிருந்த மொக்குகள் பறந்துவிட்டன.

மணமா மணந்துகொண்டிருந்த பனம்பழம் அழிகிடங்கில்  விழுந்து அது  அழிநாத்தம் நாறிக்கொன்டிருக்கிறது.

 

உலோச்சனார்
நற்றிணை 372